நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தில் மாற்றம்…!


நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுக்கான கட்டணம் 4,000 ரூபாவில் இருந்து 4,600 ரூபாவாகவும், பொது வரையறுக்கப்பட்ட நிறுவன பதிவுக்கான கட்டணம் 20,000 ரூபாவில் இருந்து 23,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, சங்கப் பதிவுக் கட்டணங்களும் திருத்தப்பட்டு, 3,000 ரூபாவாக இருந்த சங்கப் பதிவுக் கட்டணம், 3,450 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post