‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், படத்தின் இசைக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களை தாண்டியும், ஒருமாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் தற்போதும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இசைக்குழுவுடன் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடினர். படத்திற்கு மிக முக்கிய பலமாகவும் படத்தை வெறோரு தளத்திற்கு கொண்டுபோனதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் படத்தில் பணியாற்றிய இசைக் குழு தான். அதனால், அவர்களுக்கு நேற்றிரவு சிறப்பான விருந்து அளித்து வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதுவரை இந்தப் படம் 480 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#PonniyinSelvan success party happened yesterday night with music team🎶❣️
— AmuthaBharathi (@CinemaWithAB) October 27, 2022
The movie deserves the biggest success meet with full cast & crew 😌 pic.twitter.com/u9fhvmrZJW
Post a Comment