உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்...!



- மாதம் ரூ. 100,000 இற்கு அதிக வருமானம் பெறுவோருக்கு வருமான வரி-

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, வரி நீக்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மொத்த மாத வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, மிக உச்ச தனிநபர் வருமான வரி 36% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலையை சீர்திருத்துவது தொடர்பில் சர்வதேச நாண நிதியத்திடம் (IMF) இலங்கை உறுதியளித்துள்ளமைக்கு அமைய, வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் அரச வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், உள்நாட்டு இறைவரி திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் (வாக்கெடுப்புடன்) அனுமதியுடன் பாராளுமன்றத்ததில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி அறிவித்தல்


Post a Comment

Previous Post Next Post