வட்ஸ்அப் சேவை முடக்கம்: விளக்கம் கோரும் இந்தியா...?


கடந்த செவ்வாய்க்கிழமை வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி மெட்டா நிறுவனத்துக்கு இந்தியா கடிதம் அனுப்பியுள்ளது.

இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) வட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வட்ஸ் அப் சேவை முடங்கியதால் செய்திகளை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

தொழிநுட்ப கோளாறு காரணமாக வட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியானது.

வட்ஸ்அப் சேவை முடங்கியதை உறுதி செய்த நிறுவனம் 2 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சினையை சரிசெய்தது.

இந்நிலையில், இந்தியாவில் வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வட்ஸ்அப் சேவை முடங்கியதற்கான காரணத்தை விளக்கி, விரிவான அறிக்கை சமர்பிக்க மெட்டா இந்தியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post