நைஜீரியாவின் தென் கிழக்கு மாநிலமான அனப்ராவில் இடம்பெற்ற படகு விபத்து ஒன்றில் குறைந்தது 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றே ஆற்றில் மூழ்கியுள்ளது. வெள்ளம் காரணமாக பாதுகாப்பு இடத்திற்கு செல்ல முயன்றவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் உள்ளனர்.
இயந்திரக் கோளாறுக்கு உள்ளான படகு பாலம் ஒன்றில் மோதியதை அடுத்தே மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நைஜீரியாவில் மழைக்காலம் ஆரம்பித்தது தொடக்கம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு குறைந்தது 100,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
Post a Comment