67வது தென்னிந்திய பிலிம் ஃபேர் விருதுகள் - நாமினேஷன் தமிழ் படங்கள்...!


67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான நாமினேஷன் பட்டியலில் உள்ள தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள் குறித்த விபரங்களை காணலாம்.



தேசிய விருதுகள் போன்றே முக்கிய விருதாக கருதப்படுவது ஃபிலிம் ஃபேர் விருதுகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விருது விழாவை முன்னிட்டு, இந்தாண்டுக்கான 67-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, வருகிற 9-ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழில் இந்த விருதுகளுக்கு நாமினேஷன் செய்யப்பட்ட படங்கள் பற்றிக் காணலாம்.

சிறந்த படம்:

1. ஜெய்பீம்

2. க/பெ. ரணசிங்கம்

3. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

4. கர்ணன்

5. மண்டேலா

6. சார்பட்டா பரம்பரை

7. சூரரைப்போற்று



சிறந்த இயக்குநர்:

1. தேசிங்கு பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)

2. மடோன் அஸ்வின் (மண்டேலா)

3. மாரி செல்வராஜ் (கர்ணன்)

4. பி. விருமாண்டி (க/பெ. ரணசிங்கம்)

5. பா. ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)

6. சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

7. ஞானவேல் (ஜெய்பீம்)



சிறந்த நடிகர்:

1. ஆர்யா (சார்பட்டா பரம்பரை)

2. அசோக் செல்வன் (ஓ மை கடவுளே)

3. தனுஷ் (கர்ணன்)

4. துல்கர் சல்மான் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)

5. கே. மணிகண்டன் (ஜெய்பீம்)

6. சூர்யா (ஜெய்பீம், சூரரைப்போற்று)



சிறந்த நடிகை:

1. ஐஸ்வர்யா ராஜேஷ் (க/பெ. ரணசிங்கம்)

2. அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

3. ஜோதிகா (பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே)

4. லிஜோமோல் ஜோஸ் (ஜெய்பீம்)



சிறந்த இசையமைப்பாளர்:

1. அனிருத் ரவிச்சந்திரன் (தர்பார், டாக்டர், மாஸ்டர்)

2. டி. இமான் (அண்ணாத்தே)

3. ஜி.வி. பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று)

4. லியோன் ஜேம்ஸ் (ஓ மை கடவுளே)

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post