மலேசிய பாராளுமன்றம் கலைப்பு: 60 நாட்களுக்குள் தேர்தல்...!


மலேசியாவில் திடீர் தேர்தல் ஒன்றை நடத்த வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று (10) வெளியிட்டார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்று அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய யாகோப் கூறினார்.

அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை தேர்தலுக்கான காலம் இருந்தபோதும், அங்கு அரசியல் இழுபறி தீவிரம் அடைந்துள்ளது. மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில இருந்த ஐக்கிய மலே தேசிய அமைப்பு கட்சி 2018 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது தொடக்கம் அந்நாட்டில் அதிகாரப் போட்டி நீடித்து வருகிறது.

2018 தேர்தலுக்குப் பின் மலேசியாவில் இதுவரை மூன்று பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல் மூலம் மக்களிடம் ஆணை வாழங்கப்பட்டிருப்பதோடு ஜனநாயக வாக்குப் பதிவு வலுவான, ஸ்திரமான மற்றும் கெளரவமான அரசு ஒன்றை அமைக்க உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post