3 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை வருகிறது ஆப்கான்...!


ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றுக்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை வரவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதன் முதல் போட்டி நவம்பர் 25ஆம் திகதியும் எஞ்சிய இரண்டு போட்டிகளும் 27 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன. ஐ.சி.சி இன் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் திருத்தம் செய்யப்பட்ட புதிய போட்டி அட்டவணைக்கு அமைய, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் இணக்கத்துடன் அடுத்த மாதம் தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post