கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையில் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் 2,574.1 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Post a Comment