மேற்கு நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்னாலி மாகாணத்தைத் தாக்கிய மோசமான பருவமழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சோதமடைந்துள்ளன. 22 பேர் தொடர்ந்தும் காணாமல்போயிருப்பதோடு பலரும் காயமடைந்துள்ளனர். மழை தொடர்வதால் பாதிக்கப்பட்ட மலைப் பிரதேசத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில பகுதிகளில் கர்னாலி ஆறு 12 மீற்றருக்கு மேல் உயர்ந்திருப்பதாக நேபாளத்தின் அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment