ஒக்டோபர் முதல் மின் கட்டணத்துடன் 2.5% சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு...!


ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்துடன் 2.5% சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

அதன்படி மின்சாரக் கட்டணம் 2.5% அதிகரிக்கும்.

ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 2.5% சமூக பாதுகாப்பு வரியை அறிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அது மின்சார சபையின் மின் விநியோகத்துடன் தொடர்புபட்டுள்ளமையினால், அந்த வரியை மின்சார கட்டணத்துடன் இணைப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின்சார துறையின் ஒழுங்குபடுத்தும் நிறுவனமான பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் மின்சார கட்டணத்தை அதிகரித்தமையினால், குறித்த வரியை மின் பாவனையாளர்களிடம் இருந்து அறவிட வேண்டாம் என நிதி அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனை அவ்வாறு செய்ய முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

எனவே, அந்த வரியை மின்சார கட்டணத்துடன் சேர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இந்த வரியிலிருந்து நீர் கட்டணம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்தது.

Post a Comment

Previous Post Next Post