20 ஓவர் உலக கோப்பை: இலங்கை - நெதர்லாந்து இன்று மோதல்…!


20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி, நெதர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி, நெதர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. கீலாங், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்தை கீலாங் ஸ்டேடியத்தில் (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. 

ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெற முடியும். 2 வெற்றியுடன் உள்ள நெதர்லாந்து ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணிக்கும் வெற்றி அவசியமாகிறது. 

இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நமிபியா, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. சூப்பர்12-ல் கால்பதிப்பதற்கு நமிபியா இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அமீரகத்தை பொறுத்தவரை ஆறுதல் வெற்றிக்காக போராடும். 

இரு ஆட்டங்களின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும் நிலை உருவானால், ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் இரு அணிகள் தீர்மானிக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post