- பாகிஸ்தான் அணியை ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றி-
- இந்திய மகளிர் அணியுடன் சனிக்கிழமை சம்பியன் பட்டத்திற்கு பலப்பரீட்சை
ஆசிய கிண்ண மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை மகளிர் அணி சார்பில் ஹர்சித சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்க சஞ்சீவனி 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் நுஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அந்த வகையில், 123 எனும் வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில், அணித் தலைவி பிஸ்மா மாரூப் 42 ஓட்டங்களையும், நிதா தார் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் இனோகா ரணவீர 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் நாயகியாக, இனோகா ரணவீர தெரிவானார்.
அந்த வகையில், இன்று (13) இடம்பெற்ற மற்றுமொரு அரையிறுதியில் தாய்லாந்து மகளிர் அணியை 74 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (15) இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

Post a Comment