டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற இலங்கை, நெதர்லாந்து அணிகள்...!



20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நெதர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்தப் போட்டியில் நமீபியா - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இதில் நமீபியா அணி 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



இதன்மூலம், குரூப் ஏ பிரிவில் ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்றிருந்த நெதர்லாந்து அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

Post a Comment

Previous Post Next Post