அடுத்தடுத்து வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’, ‘தலைவர் 170’ படங்கள் குறித்த அப்டேட்...!

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் உடனான ‘தலைவர் 170’ படத்துக்கான பூஜை ஆகியவை பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் 169 படமாக உருவாகி வரும்நிலையில், அட்டவணையின் படி படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் முடிவடைந்தால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருவதாக ‘பிங்க்வில்லா’ இணைய செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்ஸின் துவங்கப்பட்ட தினம் என்பதால் கொண்டாட்டமாக அமையும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மேலும், இந்தப் படம் முடிந்தப் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை, வரும் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post