மண்சரிவு அனர்த்த பகுதிகளில் 15,000 வீடுகள்...!


மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் அமுல்படுத்தப்படும் என மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான வலயங்களில் வீடுகளை கட்டியுள்ளனர் என்று NBRO குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, வரக்காபொல, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு NBRO விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய, வல்லவிட்ட, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பகுதிகளில் 3ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post