தெற்கு ஈரானின் முக்கிய ஷியா மதத் தலம் ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் புதன்கிழமை (26) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது.
ஷிராஸ் நகரில் இருக்கும் இந்த மதத் தலத்தில் மாலை நேர தொழுகையின்போது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் மேலும் 19 பேர் காயமடைந்ததாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மதத் தலத்தில் கூடியவர்கள் மீது தாக்குதல்தாரி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உள்ளுர் ஆளுநர் முஹமது ஹாதி இமானி தெரிவித்தார்.
இந்த மதத் தலத்தில் எட்டாவது ஷியா இமாமான இமாம் ரோசாவின் சகோதரர் அஹமதின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment