கனடாவில் இடம்பெற்ற 11 பேர் மீது கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் கொலையாளிகள் இரண்டு சகோதரர்கள் அல்ல, ஒரே நபர் தான் எல்லோரையும் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவமானது ஒரு சகோதரரின் செயல் என்றும், பலியானவர்களில் அவரது சொந்த சகோதரரும் அடங்குவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடாவின் தொழிலாளர் தின வார இறுதியில் செப்டம்பர் 4 அன்று நடந்த இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், இதில் James Smith Cree Nation எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
முக்கிய குற்றவாளிகள் இந்த சம்பவத்தையடுத்து, முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்பட்ட சகோதரர்கள் இரண்டு பேரில் 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன் (Myles Sanderson) செப்டம்பர் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது 31 வயதான சகோதரர் டேமியன் (Damien) இறந்து கிடந்தம்ை கண்டுபிடிக்கப்பட்டது. வியாழனன்று (அக்டோபர் 6) ஒரு செய்தி மாநாட்டில்,
சஸ்காட்செவன் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) "இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று எங்களுக்கு ஒருபோதும் தெரியாது" என்று கூறியது. RCMP-யின் தளபதியான ரோண்டா பிளாக்மோர், இரு சகோதரர்களும் ஆரம்ப திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அறியப்படாத காரணங்களுக்காக, தம்பி டேமியன் மைல்ஸ் சாண்டர்சனால் கொல்லப்பட்டார் என்று கூறினார்.
"அது உண்மை என்று மட்டும் எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறியதுடன் (டேமியன்) இந்தக் கொலைகளில் ஈடுபடவில்லை" என்றும் உறுதியாக கூறினார். தாக்குதலுக்கு முன்னதாக சகோதரர்கள் போதைப்பொருள் வியாபாரம் செய்ததாகவும், அவர்கள் முன்பே மூன்று வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர், எனினும் அவை புகாரளிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறினார்.
டேமியன் மற்ற 10 பேரும் கொல்லப்படுவதற்கு முன் இறந்தாரா அல்லது பின் இறந்தாரா என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை. மைல்ஸ் சாண்டர்சன் பொலிஸ் காவலில் இறந்தார், அவரது இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் அறியப்படவில்லை.
4அதேவேளை , சில உள்ளூர் அறிக்கைகள் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், அதிகப்படியான மருந்தினால் இறந்ததாகவும் தெரிவிக்கின்றன.
4அதேவேளை , சில உள்ளூர் அறிக்கைகள் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், அதிகப்படியான மருந்தினால் இறந்ததாகவும் தெரிவிக்கின்றன.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
Post a Comment