மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பு...!


இலங்கை – மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் அரிசியை கையளித்தார்.

இதன்போது, வர்த்தக அமைச்சின் செயலாளர் S.T.கொடிகாரவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post